close
Choose your channels
Conjuring Kannappa

ஜெயம் ரவியின் 'அகிலன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இதுவா?

Tuesday, February 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் ஜெயம் ரவி நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்றான ‘அகிலன்’ திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

ஜெயம் ரவி, த்ரிஷா நடித்த ’பூலோகம்’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘அகிலன்’. ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கர், ஹரிஷ் உத்தமன், தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துவரும் இந்த படத்தில் ஜெயம் ரவி கடல் கொள்ளையராகவும் பிரியா பவானி சங்கர் போலீஸ் கேரக்டரிலும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் தற்போது இந்த படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் புரோமோஷன் பணிகளையும் தொடங்கப்பட குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்த படத்தை வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன் 2’, ‘இறைவன்’ ‘சைரன்’ ஆகிய படங்கள் இந்த ஆண்டு வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.