close
Choose your channels
NMM

ஜெயம் ரவியின் நாயகிக்கு இவ்வளவு பெரிய மகள்களா? வைரல் புகைப்படம்

Thursday, May 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி ஜோடியாக நடித்த நடிகை தனது மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இவருக்கு இவ்வளவு பெரிய மகள்களா? என ரசிகர்கள் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர்.

ஜெயம் ரவி நடித்த ’இதய திருடன்’ என்ற திரைப்படம் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் நடிகை காம்னா. அதன் பிறகு இவர் தமிழில் ’மச்சக்காரன்’ ’ராஜாதி ராஜா’ ’காசேதான் கடவுளடா’ உள்பட ஒரு சில படங்களிலும் தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு பெங்களூரு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட காம்னாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் காம்னா, சமீபத்தில் அன்னையர் தினத்தின் போது தனது இரண்டு மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நடிகை காம்னாவுக்கு இவ்வளவு பெரிய மகள்களா? என ஆச்சரியப்பட்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.