close
Choose your channels

ஜெயம் ரவியின் 'சைரன்'.. சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்..!

Tuesday, February 13, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த ‘சைரன்’ என்ற திரைப்படம் வரும் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஜெயம் ரவி நடிப்பில் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சைரன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து வரும் 16ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ரிலீஸ்க்கு முன்னர் இந்த படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி பிசினஸ் மிகப்பெரிய தொகைக்கு விற்பனையாகியுள்ளதும் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யூஏ’ சான்றிதழ் அளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 155 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 35 நிமிடங்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஜெயம் ரவியின் முந்தைய படமான ’இறைவன்’ எதிர்பார்த்த வெற்றி பெறாத நிலையில் ’சைரன்’ திரைப்படம் அவருக்கு திரையுலக வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்,. அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில், செல்வகுமார் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகிய இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.