close
Choose your channels
capmaari
capmaari
champion

ஜெயம் ரவியின் 'பூமி' படத்தின் முக்கிய அப்டேட்!

Friday, November 1, 2019 • தமிழ் Comments

ஜெயம் ரவி நடித்த ’கோமாளி’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றியை அடுத்து அதே உற்சாகத்தில் ஜெயம் ரவி தற்போது ’பூமி’ மற்றும் ’ஜனகனமன’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘பூமி’ படத்தை இயக்குனர் லட்சுமண் என்ற இயக்குனரும், ’ஜனகனமன’ படத்தை அஹ்மத் என்ற இயக்குனரும் இயக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் சற்றுமுன் ஜெயம் ரவி நடித்து வரும் ‘பூமி’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது. இந்த படம் ஏற்கனவே விவசாயிகள் குறித்த கதையம்சம் கொண்டது என்று கூறப்பட்டிருந்த நிலையில் இன்று வெளியாகிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் அதனை உறுதி செய்துள்ளது. தலைப்பாகையுடன் விவசாயி தோற்றத்துடன் இருக்கும் ஜெயம் ரவியை சுற்றி வயதான விவசாயிகள் இருப்பது போன்று இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் உள்ளது.

ஜெயம் ரவியின் 25வது படமான இந்த ‘பூமி’ படத்திற்கு டி.இமான் அவர்கள் இசையமைத்து வருகிறார். இவர் ஏற்கனவே  ஜெயம்ரவி நடித்த ’டிக் டிக் டிக்’படத்திற்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயம் ரவி ஜோடியாக நிதி அகர்வால் நடித்து வரும் இந்த படத்தில் சதீஷ் காமெடி கேரக்டரில் நடிக்கின்றார். சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், டட்லி ஒளிப்பதிவில் ஜான் படத்தொகுப்பில், ஸ்டண்ட் சில்வா ஆக்சனில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz