close
Choose your channels

ராகவா லாரன்ஸ் சகோதரர் நடிக்கும் 'புல்லட்' படத்தில் 'ஜெயிலர்'' நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Monday, August 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர், நடன இயக்குனர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் சகோதரர் எல்வின் நாயகனாக நடிக்கும் படம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்திற்கு ‘புல்லட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

5 ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் ’டைரி’ இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தில் வைஷாலி ராஜ் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது என்பதும், சாம் சிஎஸ் இசையமைக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவும் வடிவேல் விமல்ராஜ் படத்தொகுப்பு பணியும் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தில் ’ஜெயிலர்’ படத்தில் நடித்த சுனில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து படத்தை கலகலப்பான பாதைக்கு கொண்டு சென்ற சுனில் இந்த படத்தில் இணைத்துள்ளதை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.