குடிபோதையில் ரகளை செய்த 'ஜெயிலர்' நடிகர்.. வாழ்நாள் தடை விதிக்கப்படுமா?


Send us your feedback to audioarticles@vaarta.com


ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்த நடிகர் விநாயகன் ஏற்கனவே விமான நிலையத்தில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டார் என்பதும், அதன் பின் அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் குடிபோதையில் அவர் ரகளை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே குடிபோதையில் கோவாவில் உள்ள தேநீர் கடையில் பணிபுரியும் ஊழியர்களை கடுமையாக திட்டியதால் அது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நடிகர் விநாயகன் குடிபோதையில் தனது வீட்டில் இருந்தே சாலை நோக்கி செல்பவர்களை தகாத வார்த்தைகளில் பேசியதாக தெரிகிறது. மேலும் அவர் ரகளை செய்வதை அவரது எதிர் வீட்டில் இருந்தவர் வீடியோ எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நிலையில் விநாயகனை ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
குடிபோதையில் தொடர்ச்சியாக விநாயகன் ரகளை செய்து கொண்டிருப்பதால் மலையாள சினிமாவில் நடிக்க முடியாத அளவில் அவருக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என மலையாள திரையுலக பிரபலங்கள் கோரிக்கை விடுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
#Vinayakan 🥃🔞🙉
— Tharani ᖇᵗк (@iam_Tharani) January 20, 2025
Actor or Drunker 😡
He should be banned from acting.
pic.twitter.com/JK3UWJTzop
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com