close
Choose your channels
Viruman
Laal

'ஜெய்பீம்'  நடிகையுடன் இணையும் லாஸ்லியா: புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு!

Friday, April 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்த 'ஜெய்பீம்’ படத்தில் நடித்த நடிகை லிஜோமோல் ஜோஸ் உடன் பிக்பாஸ் லாஸ்லியா இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லிஜோமோல் ஜோஸ் மற்றும் லாஸ்லியா இணைந்து நடிக்கும் திரைப்படத்திற்கு ’அன்னபூரணி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை லியோனால் ஜோஸ்வா என்பவர் இயக்கயிருக்கிறார். இந்த படத்திற்கு ‘96’ புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்க இருப்பதாகவும் இந்த படத்தில் ஹரிகிருஷ்ணன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் குறித்து லிஜோமோல் ஜோஸ் கூறியபோது, ‘ஜெய்பீம்’ படத்திற்கு பிறகு தமிழில் நல்ல கேரக்டருக்காக காத்திருந்தபோது இந்த கதை எனக்கு ரொம்ப பிடித்தது. இந்த படத்தில் நான் பூரணி என்ற ஹவுஸ்வைஃப் வேடத்தில் நடிக்கின்றேன்’ என்று கூறியுள்ளார்.

அதேபோல இந்த படம் குறித்து கூறிய லாஸ்லியா, ‘அன்னா’ என்ற பணக்கார பெண் கேரக்டரில் தான் நடிப்பதாகவும் லிஜோமோல் ஜோஸ் உடன் இணைந்து நடிப்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் இருவருக்கும் சம அளவில் முக்கியத்துவம் தரும் கதை இது என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் தனக்கு ஆக்ஷன் காட்சிகள் இருப்பதாகவும் அதற்காக தயாராகி வருவதாகவும் லாஸ்லியா தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.