close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan
Buffoonn

'கே.ஜி.எஃப் 2' இயக்குனரின் அடுத்த படத்தில் கமல்ஹாசன்? என்ன கேரக்டர் தெரியுமா?

Thursday, May 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான ’கே.ஜி.எஃப் 2’ திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும், 1,300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து உள்ளது என்பதும் தென்னிந்திய திரைப்படம் செய்த இந்த சாதனையை இந்தியாவே திரும்பிப் பார்த்து உள்ளது என்பதும் தெரிந்ததே.

இதனை அடுத்து இந்த படத்தின் நாயகன் யாஷ் மற்றும் இயக்குனர் பிரசாந்த் நீல் ஆகிய இருவருக்கும் நாடு முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் இயக்குனர் பிரசாந்த் நீல் ஏற்கனவே பிரபாஸ் நடித்த ‘சலார்’ என்ற படத்தை இயக்கி முடித்த நிலையில் தற்போது அடுத்த படத்திற்கு தயராகியுள்ளார்.

பிரசாந்த் நீல் இயக்கும் அடுத்தப் படத்தின் நாயகனாக ஜூனியர் என்டிஆர் நடிக்க இருப்பதாகவும் இது அவருடைய 31வது படம் என்றும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தில் நாயகனுக்கு இணையாக ஒரு வில்லன் கேரக்டர் இருப்பதாகவும், அந்த வில்லன் கேரக்டரில் நடிக்க கமல்ஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த கேரக்டர் மிகவும் வலுவானது என்பதால் கமல்ஹாசன் தான் பொருத்தமாக இருப்பார் என்று பிரசாத் நீல் கருதுவதாகவும் இருப்பினும் கமல்ஹாசன் தரப்பில் இருந்து இன்னும் சம்மதமோ அல்லது மறுப்போ வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் முதன்முதலாக ஜூனியர் என்டிஆரின் திரைப்படத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.