close
Choose your channels

சஞ்சு சாம்சன் விக்கெட்டை வீழ்த்து ஒரே சிஎஸ்கே பவுலர் இவர்தான்!

Monday, April 19, 2021 • தமிழ் Sport News Comments

ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டியில் இன்றைய 12வது போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன. சென்னை அணியை பொருத்தவரை கடந்த போட்டியில் மிக அபாரமாக அனைவரும் விளையாடியதால் அணியில் பெரிய மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் சென்னை அணியில் இடம்பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளரான பெஹண்ட்ரூப் அவர்களின் தனிமைப்படுத்தும் காலம் முடிந்து விட்டதால் இன்று அணியில் இணைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு ஒருவேளை அவர் அணியில் இணைக்கப்பட்டால் பிராவோ வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை சிம்மசொப்பனமாக இருப்பவர் கேப்டன் சஞ்சு சாம்சன் மட்டுமே. அவரது விக்கெட்டை வீழ்த்தி விட்டால் அந்த அணியை எளிதில் தோற்கடித்து விடலாம் என்பதே தற்போதைய நிலையாக உள்ளது. கடந்த போட்டியில் செஞ்சுரி அடித்த சஞ்சு சாம்சனை வீழ்த்தக் கூடிய ஒரே சிஎஸ்கே பந்துவீச்சாளர் தீபக் சஹார் ஆகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருடைய துல்லியமான பந்துவீச்சு கட்டாயம் சஞ்சு சாம்சனை வீழ்த்தும் அல்லது ரன்கள் குவிப்பதை தடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சனை தீபக் சஹார் வீழ்த்துவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

Get Breaking News Alerts From IndiaGlitz