close
Choose your channels

தொடர் விடுமுறையை குறி வைத்த 'இறைவன்'.. ரூ.250 கோடி பட்ஜெட் படத்துடன் மோதுகிறதா?

Monday, August 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி, நயன்தாரா நடித்த ’இறைவன்’ திரைப்படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தாமதம் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி போக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளன.

‘என்றென்றும் புன்னகை’ பட இயக்குனர் அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்த ’இறைவன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இந்த படத்தின் பின்னணி இசை அமைக்கும் பணியை யுவன் சங்கர் ராஜா துவக்கியதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த படத்தை வரும் செப்டம்பர் மாதம் இறுதி வாரத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். வரும் செப்டம்பர் இறுதி வாரத்தில் மிலாடி நபி விடுமுறை வருவதை அடுத்து தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் அந்த விடுமுறை தினத்தை பயன்படுத்திக்கொள்ள ’இறைவன்’ படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

செப்டம்பர் இறுதி வாரத்தில் தான் ரூபாய் 250 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட பிரபாஸ் நடித்த ’சலார்’ திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் அந்த படத்துடன் ’இறைவன்’ படம் மோதவுள்ளது. இந்த படம் ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

ஜெயம் ரவி ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இந்த படம் ஹரி வேதாந்த் ஒளிப்பதிவில் மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பில் உருவாகி வருகிறது. இந்த படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.