close
Choose your channels
NMM
NMM

நட்சத்திர கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள்… அனுஷ்கா, சாக்ஷி பற்றிய சுவாரசியத் தகவல்கள்!

Thursday, July 15, 2021 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவை பொறுத்தவரை கிரிக்கெட் மற்றும் சினிமா எனும் இரண்டு விஷயத்திற்குத்தான் ஏராளமான ரசிகர் கூட்டம் உண்டு. அந்த வகையில் இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள் சிலர் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றனர். கூடவே அவர்களுடைய சொந்த வாழ்க்கை குறித்த சில தகவல்களும் ரசிகர்களுக்கு சுவாரசியத்தை ஏற்படுத்தி விடுகிறது.

மேலும் இந்தியக் கிரிக்கெட் நட்சத்திரங்களின் படிப்பு, அவர்களுடைய சம்பளம் போன்ற தகவல்களும் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுகின்றன. கூடவே நட்சத்திரங்களின் மனைவிகள், அவர்களுடைய தொழில் மற்றும் படிப்பு குறித்த தகவல்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வகையில் இந்தியக் கிரிக்கெட் அணியில் உள்ள சில முக்கியப் பிரபலங்களைப் பற்றியும் அவர்களைப் பற்றிய சுவாரசியமான தகவல்களையும் இங்கே பார்க்கலாம்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி அவர்கள் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகை மற்றும் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக வலம்வந்த இவர் திருமணத்திற்குப் பிறகு தொழில்துறையில் கால்பதித்து இருக்கிறார். கூடவே விளம்பரப் படங்களில் ஏராளமான வருமானத்தை பெற்று வருகிறார். இவர் Arts துறையில் பட்டப்படிப்பை முடித்து  Economics துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தல தோனி தனது சிறு வயது பள்ளித்தோழியை காதலித்து கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய காதல் பெரும் சுவாரசியத்தைக் கொண்டிருக்கிறது. சாக்ஷி-தோனி இருவரும் பள்ளியில் ஒன்றாகப் படித்து இருந்தாலும் வளர்ந்த பிறகு தொடர்பே இல்லாமல் இருந்து இருக்கிறது. சாக்ஷி அவுரங்காபாத்தில் உள்ள ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரியில் படித்துக் கொண்டே மும்பை தாஜ் ஹோட்டலில் வேலை செய்து கொண்டு இருந்தார்.

அப்போது இந்திய கிரிக்கெட் அணி இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்காக தாஜ் ஹோட்டலில் தங்கி இருந்தது. அந்த சமயத்தில் தோனியை எப்படியாவது சந்தித்து விட வேண்டும் என நினைத்த சாக்ஷி தனது மேலாளர் யுதாஜித் என்பவரின் உதவியைப் பெற்று அன்றைக்கு தோனியை ஹோட்டல் அறையிலேயே சந்தித்து இருக்கிறார். கூடவே பள்ளி நியாபகங்களையும் அவருக்கு ஏற்படுத்தி இருக்கிறார். இப்படி அரும்பிய நட்பு பின்னர் 2008 வாக்கில் காதலாகி பின்னர் 2010 ஆண்டு திருமணத்தில் முடிந்ததும் குறிப்பிடத்தக்கது.

 ஹிட்மேன் என அழைக்கப்படும் ரோஹித் சர்மா Sports event Manager ஆக வேலைப்பார்த்த சஜ்தே என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். அதுவும் சஜ்தே தன்னுடைய விளையாட்டு நிகழ்வுகளுக்கு மேலாளராக தொழில் முறையில் பணியாற்றியபோதுதான் ரோஹித் சர்மா தன்னுடைய காதலை வெளிப்படுத்தி இருக்கிறார். மும்பையில் உள்ள போரிவாலி ஸ்போர்ட்ஸ் கிளப்பில் முழங்கால் இட்டு சஜ்தேவிடம் மோதிரத்துடன் தனது காதலை வெளிப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியக் கிரிக்கெட்டின் முடிசூடா மன்னன் சச்சின் டெண்டுல்கர் அவர்கள் மருத்துவரான அஞ்சலி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுடைய சந்திப்பு ஒரு விமான நிலையத்தில்தான் நடைபெற்றதாம்.

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான சுரேஷ் ரெய்னா பி.டெக் படித்த பிரியங்கா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். பிரியங்கா Accenture, Wipro போன்ற முக்கிய நிறுவனங்களில் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.