close
Choose your channels
Raayan

'இந்தியன் 2' படத்தின் மெயின் வில்லன்.. மறைத்து வைத்த ரகசியம் இதுதான்..!

Tuesday, June 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’இந்தியன் 2’ படத்தில் மெயின் வில்லனாக பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் நடித்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வருடங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் மெயின் வில்லன் குறித்த ரகசியத்தை இதுவரை படக்குழுவினர் கட்டி காத்து வந்த நிலையில் தற்போது அந்த மெயின் வில்லன் எஸ்ஜே சூர்யா என்பது தெரிய வந்துள்ளது. அவர் தனது காட்சிகளின் படப்பிடிப்பை முழுமையாக முடித்து விட்டதாகவும் இதையடுத்து தற்போது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஆக இந்த தகவலை வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எஸ்ஜே சூர்யா வின் திரையுலக வாழ்க்கையில் இந்த படம் மிகப்பெரிய படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ’இந்தியன் 2’ திரைப்படத்தில் கமல்ஹாசன், விவேக், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானிசாகர், குரு சோமசுந்தரம், பாபி சிம்ஹா, மனோபாலா, சமுத்திரக்கனி, ஜார்ஜ் மரியான், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பெரும் நட்சத்திரக் கூட்டம் இருக்கும் நிலையில் தற்போது எஸ்ஜே சூர்யா இந்த படத்தில் இணைந்துள்ளதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது



ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன என்பது தெரிந்ததே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment