close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan

விஜய் அணிந்திருப்பது சிலுவையா? நங்கூரமா? 'அரபிக்குத்து' பாடலால் எழுந்த விவாதங்கள்!

Thursday, February 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற ‘அரபிக்குத்து’ பாடல் வெளியான நிலையில் இந்த பாடலுக்கு ரசிகர்கள் மாபெரும் வரவேற்பை அளித்துள்ளனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த பாடலில் விஜய் தனது கழுத்தில் சிலுவை அணிந்துள்ளதாக ஒரு பிரிவினரும், அது சிலுவை அல்ல நங்கூரம் என்று ஒரு பிரிவினரும் சமூக வலைதளங்களில் வாக்குவாதம் செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘அரபிக்குத்து’ பாடலில் விஜய் தனது கழுத்தில் சிலுவை அணிந்து இருப்பதாக இந்து மக்கள் கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் விஜய் சிலுவை அணிந்து இருப்பது வரவேற்கத்தக்க ஒன்று என்றும் அவர் தன்னுடைய மத அடையாளத்தை தைரியமாக வெளிப்படுத்துவதில் தவறில்லை என்றும் இதனை இந்து மக்கள் கட்சி வரவேற்கிறது என்றும் இந்தியாவில் அனைவருக்கும் மத சுதந்திரம் உள்ளது என்றும் தேவையற்ற பிரச்சாரங்கள் தவிர்க்கப்பட வேண்டும்’ என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இந்த பதிவுக்கு பதிலடி தரும் வகையில் அது சிலுவை அல்ல நங்கூரம் என்று சிலர் கமெண்ட் அடித்து வருகின்றனர். ஆனால் ஒரு சிலரோ அது சிலுவை தான் என்றும், நங்கூர வடிவில் உள்ள சிலுவை என்றும் கூறி வருகின்றனர். இது உண்மையில் சிலுவையா? அல்லது நங்கூரமா? அல்லது இரண்டும் இல்லாத வேறு வகையா? இது படத்தில் விஜய் கேரக்டருக்கு தொடர்புடையதா? என்பதை படக்குழுவினர்தான் விளக்க வேண்டும்.

இருப்பினும் விஜய் அணிந்திருப்பது எதுவாக இருந்தாலும் அது நிச்சயம் மத அடையாளத்தை கண்டிப்பாக வெளிப்படுத்தும் வகையில் இருக்காது என்றும் விஜய் அனைத்து மதங்களுக்கும் பொதுவானவர் என்றும், தற்செயலாக நிகழ்ந்த ஒன்றை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் நடுநிலை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.