close
Choose your channels
Conjuring Kannappa

இந்த வார ஓடிடியில் ஒரே ஒரு தமிழ்ப்படம் தான்.. முழு விவரங்கள்..!

Thursday, September 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் 3 அல்லது 4 திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் அதேபோல சில படங்கள் ஓடிடியிலும் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இந்த வாரம் திரையரங்குகளில் ’ஆர் யூ ஓகே பேபி’ உள்பட சில படங்கள் வெளியாகி உள்ள நிலையில் ஓடிடியில் ஒரே ஒரு தமிழ் படம் மட்டுமே வெளியாக உள்ளது. அந்த ஒரு படம் ’டைனோசர்ஸ்’.

கடந்த ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியான ’டைனோசர்ஸ்’ படத்தில் , ரிஷி, உதய் கார்த்திக் உள்பட பலர் நடித்துள்ளனர். புதுப்பேட்டை, மெட்ராஸ், வடசென்னை போன்ற படங்கள் போலவே இந்த படமும் வட சென்னையில் நடக்கும் கதை அம்சம் கொண்டது. எம்ஆர் மாதவன் இயக்கிய இந்த படம் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் பிற மொழி படங்கள் குறித்த தகவலை தற்போது பார்ப்போம். டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ‘அதிடி’ என்ற ஹாட்ஸ்டார் சீரிஸ் இந்த வாரம் வெளியாகிறது. இந்த சீரிஸ் தமிழ் உள்பட 7 மொழிகளில் பார்க்கலாம். அதேபோல் ஹாட்ஸ்டாரில் ‘மேன்சன் 24’ என்ற தெலுங்கு சீரிஸ் வெளியாகிறது.

மேலும் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ’Gandee vadhari Arjuna’ என்ற தெலுங்கு படமும், ’வாய்ஸ் ஆஃப் சத்தியநந்தன்’ என்ற மலையாள திரைப்படம் சிம்ப்ளி சவுத் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதுபோக சில ஆங்கில மற்றும் இந்தி சீரிஸ் மற்றும் திரைப்படங்களும் வெளியாகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.