close
Choose your channels
NMM
NMM

இளையராஜா செய்து தருவார் என நம்புகிறேன்: ஏ.ஆர்.ரஹ்மான் டுவிட்!

Monday, March 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் துபாயில் சொந்தமாக ஸ்டூடியோ ஒன்றை அமைத்து இருக்கும் நிலையில் அந்த ஸ்டூடியோவுக்கு இசைஞானி இளையராஜா வருகை தந்துள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் இசை ஜாம்பவான்களான இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய இருவரும் துபாயில் சந்தித்த நிகழ்வு தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

துபாயில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் Firdaus ஸ்டூடியோ என்பதை அமைத்திருக்கும் நிலையில் இந்த ஸ்டூடியோவுக்கு இசைஞானி இளையராஜா சென்றார். அவரை வரவேற்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் மேஸ்ட்ரோ இளையராஜா அவர்களை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி. Firdaus ஆர்கெஸ்ட்ரா வெளியிடுவதற்கு அற்புதமான இசைக்கோர்வை ஒன்றை இளையராஜா செய்து தருவார் என்று நம்புகிறேன் என ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இசைப்புயல் மற்றும் இசைஞானி ஆகிய இருவரும் இணைந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.