close
Choose your channels
Viruman
Laal

தனுஷ், எல்லாத்துக்கும் உன் மாமனார் தான் காரணம்: இளையராஜாவின் பேச்சால் அதிர்ந்த இசை நிகழ்ச்சி!

Saturday, March 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று நடைபெற்ற ராக் வித் ராஜா என்ற இசை நிகழ்ச்சியில் இளையராஜா பேசும்போது ’எல்லாத்துக்கும் உன் மாமனார் தான் காரணம் தனுஷ்’ என்று இளையராஜா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இசைஞானி இளையராஜா நேற்று நடத்திய ராக் வித் ராஜா என்ற இசை நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த இசை நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் நடித்து தயாரித்த ’வள்ளி’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ’என்னுள்ளே என்னுள்ளே’ என்ற பாடலும் பாடப்பட்டது.

இந்த பாடலை பாடி முடித்த உடன் இளையராஜா இந்த பாடல் குறித்து தனது அனுபவங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். இந்த பாடல் மிகவும் சிறப்பாக வருவதற்கு ரஜினிகாந்த் தான் காரணம் என்றும், அவரை ஒரு நடிகராக நான் பார்த்து இருக்கின்றேன், ஆனால் அவர் ஒரு சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்பதை அன்றுதான் பார்த்தேன் என்றும், ரஜினிகாந்த் ஒரு நல்ல கதாசிரியர் என்றும் புகழ்ந்து பேசினார்.

அதன்பிறகு தனுஷிடம் 'இந்த பாடல் இவ்வளவு அழகாக வர உன் மாமனார் தான் காரணம்’ என்று கூறியதை அடுத்து அந்த இசை நிகழ்ச்சியின் மேடையே அதிரும் வகையில் கரகோசம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.