close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan

'விருமன்' திரைப்படத்தில் திடீரென இணைந்த இளையராஜா!

Tuesday, August 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி, அதிதிஷங்கர் நடிப்பில், முத்தையா இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான ’விருமன்’ திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் இறுதிகட்ட புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் மதுரையில் ’விருமன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது என்றும் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் தற்போது இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியமாக இந்த படத்தின் டைட்டில் பாடலை இசைஞானி இளையராஜா பாடி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இசைஞானி இளையராஜா பல திரைப்படங்களுக்கு டைட்டில் பாடலை பாடியுள்ளார் என்பதும் அவர் டைட்டில் பாடல் பாடிய படங்கள் அனைத்துமே மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இளையராஜா டைட்டில் பாடல் பாடிய ’விருமன்’ திரைப்படம் பெரும் வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரண், மைனா நந்தினி, மனோஜ் பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு செல்வகுமார் ஒளிப்பதிவும், வெங்கட்ராஜா படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.