close
Choose your channels
Viruman
Laal

மீண்டும் இணையும் இளையராஜா - யுவன்: எந்த படத்திற்கு தெரியுமா?

Sunday, June 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முதல் முறையாக இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து விஜய் சேதுபதி நடித்த ’மாமனிதன்’ என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்தனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் இருவரும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இசைஞானி இளையராஜா, அவரது மகன் யுவன்சங்கர் ராஜா ஆகிய இருவரும் தனித்தனியாக பல திரைப்படங்களில் இசை அமைத்து இருந்தாலும் விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான ’மாமனிதன்’ என்ற திரைப்படத்தில் இணைந்து இசையமைத்தனர். இந்த படத்தில் இளையராஜாவின் இன்னொரு மகனான கார்த்திக் ராஜாவும் ஒரு இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா மற்றும் அவரது மகன் யுவன்சங்கர் ராஜா இணைந்து இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் நாக சைதன்யா ஹீரோவாக நடிக்க உள்ளார் என்பதும், தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் 23ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.