ராஷ்மிகா மகளுடன் கூட நடிப்பேன்.. உங்களுக்கு என்ன பிரச்சனை? பிரஸ்மீட்டில் சல்மான்கான்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சல்மான் கான் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான ‘சிக்கந்தர்’ திரைப்படத்தின் பிரஸ் மீட்டில், "ராஷ்மிகாவுடனும் நடிப்பேன், அவருடைய மகளுடனும் நடிப்பேன், உங்களுக்கு என்ன பிரச்சனை?" என்று சல்மான் கான், ஒரு கேள்விக்கு பதிலளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘சிக்கந்தர்’ படத்தின் நாயகன் சல்மான் கானுக்கு 59 வயதாகிறது. இந்த படத்தின் ஹீரோயின் ராஷ்மிகா மந்தனாவுக்கு 28 வயது மட்டுமே. இதனால், இருவருக்கும் இடையிலான வயது வித்தியாசம் 31 ஆண்டுகள்.
இதுகுறித்து பிரஸ் மீட்டில் ஒருவர் கேள்வி கேட்டபோது, "எனக்கும் ராஷ்மிகாவுக்கும் 31 வயது வித்தியாசம் இருக்கிறதாக சொல்கிறீர்கள். இதில் ஹீரோயின் ராஷ்மிகாவுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. அவருடைய தந்தைக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. அப்படி இருக்கும்போது, உங்களுக்கு மட்டும் என்ன பிரச்சனை?" என்று கேட்டார்.
மேலும், "ராஷ்மிகாவுக்கு திருமணமாகி, அவருக்கு ஒரு மகள் பிறந்து, அவருடைய மகள் ஒரு பெரிய ஸ்டாராக வந்தால், அவருடன் கூட நாங்கள் பணியாற்றுவோம். அதற்கு அம்மா ராஷ்மிகாவும் ஒப்புதல் தருவார் என்று நினைக்கிறேன்" என்று கூறினார்.
இந்த நிகழ்வு நடந்தபோது, அருகில் இருந்த ராஷ்மிகா இதற்கு சிரித்தார். இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#WATCH | Mumbai: On the 31-year age gap between him and upcoming film 'Sikandar' co-star Rashmika Mandanna, actor Salman Khan says, "They say there is a 31-year difference between the heroine and me. If the heroine and her father don't have any problem, then why do you have a… pic.twitter.com/qNBIFLNmrH
— ANI (@ANI) March 24, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com