close
Choose your channels
IKK

பாலிவுட் நடிகர் சோனு சூட்டிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை திடீர் ஆய்வு!

Wednesday, September 15, 2021 • தமிழ் Comments

பாலிவுட் நடிகரான சோனு சூட் கொரோனா காலத்தில் மக்களின் ஆஸ்தான நாயகனாக மாறியிருந்தார். தற்போது மும்பையில் உள்ள நடிகர் சோனு சூட்டிற்குச் சொந்தமான 6 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் ஆய்வு நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

கொரோனா ஊரடங்கின்போது இந்தியாவில் உள்ள பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்துவந்தனர். அவர்களை தனது சொந்த செலவில் நடிகர் சோனு சூட் பத்திரமாக அனுப்பி வைத்தார். மேலும் கொரோனா காலத்தில் ஏழை மக்களுக்குத் தேவையான பல்வேறு உதவிகளை தேடித்தேடிப் போய் செய்துவந்தார். இதனால் மக்களின் ஆஸ்தான நாயகனாக மாறியதோடு சில இடங்களில் இவருக்கு பொதுமக்கள் பேனர் வைக்கும் அளவிற்கு இவரது செல்வாக்கும் உயர்ந்தது.

அந்த வகையில் டெல்லி அரசு, பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டு நிகழ்ச்சிகளுக்கு விளம்பரத்தூதராக நடிகர் சோனு சூட்டை நியமித்தது. இதனால் நடிகர் சோனு சூட் ஆம் ஆத்மி கட்சியில் இணையப்போகிறார் என்பது போன்ற தகவல்கள் கூட வெளிவந்தன. ஆனால் இதுபோன்ற தகவலை உறுதிப்படுத்தாத நடிகர் சோனு சூட் தொடர்ந்து பொதுமக்களுக்கு தனது சொத்துகளை அடமானம் வைத்து உதவி செய்துவந்தார்.

தற்போது மும்பையில் நடிகர் சோனு சூட்டிற்கு சொந்தமான 6 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் கடும் பரபரப்பை கிளப்பி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz