close
Choose your channels
LoveToday
CWK

கமல்ஹாசனுக்கு வில்லனாக நடிக்க தயார்.. 'நாயகன்' பட நடிகை பேட்டி

Thursday, October 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ’நாயகன்’ என்ற திரைப்படத்தில் ’நான் சிரித்தால் தீபாவளி’ என்ற பாடலுக்கு நடனமாடியவர் பிரபல கவர்ச்சி நடிகை பபிதா. இந்த பாடல் மிகப்பெரிய ஹிட்டானதை அடுத்து அவர் பல படங்களில் கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்ஜிஆர் நடித்த பல படங்களில் இவரது தந்தை ஜஸ்டின் வில்லனாக நடித்துள்ளார் என்பதும் அதன் பிறகு எம்ஜிஆர் முதல்வரானதும் அவருக்கு பாதுகாவலராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது மீண்டும் திரையுலகில் நடிக்க ஆர்வத்துடன் கிளம்பியுள்ள பபிதாவுக்கு ஒரு சில வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் கமல்ஹாசனின் ’நாயகன்’ படத்தில் அவருடன் நடித்தது எனது அதிர்ஷ்டம் என்றும் அந்த பாடல் இன்றளவும் புகழ் பெற்ற பாடலாக விளங்குகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் அழைப்பு விடுத்தால் அவரது படத்தில் நடிக்க தயார் என்றும் குறிப்பாக அவருக்கு வில்லனாக நடிக்கவும் தயார் என்றும் தெரிவித்துள்ளார். நடிகை பபிதாவுக்கு கமல்ஹாசன் வாய்ப்புக் கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.