close
Choose your channels

பிக்பாஸில் நான் இல்லை, அதைவிட எனக்கு சூப்பர் வேலை இருக்குது: மறுப்பு தெரிவித்த பிரபலம்

Wednesday, September 16, 2020 • தமிழ் Comments

பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் ஆரம்பிக்க உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக பல பிரபலங்களின் பெயர்கள் செய்திகளில் அடிபட்டு வருவது தெரிந்ததே. குறிப்பாக நடிகர்கள் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், நடிகைகள் அம்ரிதா ஐயர், சனம் ஷெட்டி, ரம்யா பாண்டியன் உள்பட பலர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் என்று தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

இந்த நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களில் ஒருவர் கருண் ராமன் என்று கூறப்பட்டது. இவர் நயன்தாரா உள்ளிட்ட பல பிரபலங்களின் செலிபிரிட்டி ஸ்டைலிஸ்ட் என்பதும், ஃபேஷன் கோரியோகிராபர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தனது பெயர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் பட்டியலில் வருவதை அடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. அதை விட சூப்பரான ஒரு வேலை எனக்கு இருக்கிறது. எனவே வீண் வதந்திகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்றும் விளக்கமளித்துள்ளார். இதனை அடுத்து கருண் ராமன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
 

Get Breaking News Alerts From IndiaGlitz