ஆஸ்கர் விருதுக்காக செலவு செய்த தொகை இத்தனை கோடியா? எஸ்.எஸ்.ராஜமவுலி மகன் தகவல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சமீபத்தில் ஆஸ்கர் விருது விழா நடத்தப்பட்ட நிலையில் இந்த விழாவில் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ’ஆர்.ஆர்.ஆர் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற ’நாட்டு நாட்டு’ என்ற பாடலுக்கு விருது கிடைத்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் ஆஸ்கார் புரமோஷனுக்காக செலவு செய்த தொகை குறித்த தகவலை எஸ்எஸ் ராஜமவுலியின் மகன் தெரிவித்துள்ள நிலையில் அந்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு வெளியான ’ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் ராஜா, ஆலியா பட், அஜய்தேவ்கான், ஸ்ரேயா சரண் உள்பட பலர் நடித்திருந்தனர். இந்த படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படம் ஏற்கனவே பல விருதுகளை பெற்றுள்ள நிலையில் சமீபத்தில் ’நாட்டு நாட்டு’ பாடலுக்கான ஆஸ்கர் விருதை பெற்றது. இதனை அடுத்து இந்த படத்தின் குழுவினர்களுக்கு ஒட்டுமொத்த இந்தியாவே வாழ்த்து தெரிவித்தது.
இந்த நிலையில் ஆஸ்கர் புரமோஷனுக்காக மற்றும் 8.50 கோடி ரூபாய் செலவு செய்ததாக இயக்குனர் ராஜமௌலி மகன் கார்த்திகேயா சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இவர்தான் இந்த படத்தின் ஆஸ்கர் புரோமோஷன் பணிகளை முன்னெடுத்துச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதுகுறித்து கார்த்திகேயா அந்த பேட்டியில், ’ஆஸ்கர் விருதை பணம் கொடுத்து வாங்க முடியாது என்பது எல்லோருக்குமே தெரியும். 'ஆர்.ஆர்.ஆர்’ படத்தை பரப்புரை செய்வதற்கு மட்டும்தான் ரூ.8.5 கோடி செலவு செய்தோம். முதலில் ரூ.5 கோடி மட்டுமே செலவு செய்ய திட்டமிட்டிருந்தோம். ஆனால் செலவு அதிகமாகிவிட்டது’ என்று தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments