close
Choose your channels
siren
lal_salaam

எத்தனை பேர் இன்று வெளியே போக போறாங்க.. முதல் புரமோவில் சொன்ன கமல்ஹாசன்..!

Saturday, November 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களுக்கு மேல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது. இந்த நிலையில் இந்த வார இறுதியில் திடீரென மூன்று எக்ஸ் போட்டியாளர்கள் உள்ளே வர இருப்பதாகவும் அதற்கு பதில் சில போட்டியாளர்கள் வெளியே போக போவதாகவும் பிக் பாஸ் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று கமல்ஹாசன் தோன்றும் எபிசோட் என்பதால் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சற்று முன் வெளியான முதல் ப்ரமோவில் கமல்ஹாசன் பேசியபோது ’பூகம்பத்தை பத்தி அவங்க சொன்னாங்க, நாமளும் கேட்டுகிட்டோம். அவங்க வீட்ல ஏற்படக்கூடிய பூகம்பங்கள் என்னென்ன என்பது அவங்களுக்கு தெரியாமல் இருக்காது.

தனக்கு பிடிச்சவங்க எது செஞ்சாலும் கரெக்ட், பிடிக்காதவங்க எது செஞ்சாலும் தப்பு என்று தான் அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விளையாட்டை மாற்ற, எத்தனை பேர் உள்ள போக போறாங்க? எத்தனை பேர் வெளியே போக போகிறார்கள்? என்பதை இன்னும் கொஞ்ச நேரத்துல பார்ப்போம் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

ஏற்கனவே மூன்று பேர் உள்ளே வரப்போவதாக பிக் பாஸ் அறிவித்திருந்த நிலையில் அதற்கு இணையாக மூன்று பேர் வெளியே போவார்களா? அல்லது இரண்டு பேர்கள் மட்டுமே போவார்களா? அந்த இரண்டு பேர்கள் யார்? யார்? என்பதை இன்றைய எபிசோடில் பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.