ஹாட்ஸ்டாரில் 'உப்பு புளி காரம்'.. பொன்வண்ணனுக்கு இன்னொரு மகனா? திடீர் ட்விஸ்ட்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி உள்ள ’உப்பு புளி காரம்’ என்ற வெப் தொடரின் முதல் இரண்டு எபிசோடுகள் எப்படி இருந்தது என்பதை சற்று முன் பார்த்தோம். இந்த நிலையில் அடுத்த இரண்டு எபிசோடுகளில் தனது முன்னாள் காதலன் சிவா குறித்த மலரும் நினைவுகளை சின்மயி நினைத்து பார்க்கிறார். அப்போது அவருடைய சகோதரி வந்து கேட்கும் போது நீ காதலித்து பார்த்தால் தான் உனக்கு தெரியும் என்று கூறுகிறார்
இந்த நிலையில் சிவாவின் அம்மா தனது மகனுக்கு பெண் பார்க்க அவர் கூறும் கண்டிஷன் கேட்டு மேட்ரிமோனியல் அதிகாரி அதிர்ச்சி அடைந்து விட்டார். இதனை அடுத்து சிவாவின் அம்மா வீட்டுக்கு வந்த போது அவருக்கும் அவருடைய கணவருக்கும் இது சம்பந்தமாக வாக்குவாதங்கள் செல்கின்றன.
இந்த நிலையில் ராஜ் அய்யப்பா இந்த தொடரில் ஒரு நடிகரமாக அறிமுகம் ஆகிறார். அவருக்கு சரியாக நடிக்க வரவில்லை என்று இயக்குனர் திட்ட , அவர் இயக்குனரிடம் கோபித்துக் கொண்டு வெளியே செல்கிறார். ஏற்கனவே தன்னை வைத்து சிவா இயக்கிய தொடர் மீம்ஸ்களாக கேலி செய்யப்பட, சிவாவிடம் கோபமடைகிறார். அதற்கு சிவா நீங்கள் என் மேல் கோபமடைந்து பிரயோஜனம் இல்லை ஒரு நல்ல நடிப்பு பயிற்சி பள்ளியில் சேர்ந்து படியுங்கள் என்று கூறுகிறார்
இந்த நிலையில் தான் சிவாவின் நண்பன் நம் கல்லூரி நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடும் நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறேன், வந்துவிடு என்று கூற, அதெல்லாம் முடியாது என்று முதலில் சிவா சொன்ன நிலையில், சின்மயி வருகிறார் என்றவுடன் வருவதற்கு ஒப்புக்கொள்கிறார்.
இந்த நிலையில் தான் கல்லூரி பழைய கல்லூரி நண்பர்கள் ஒன்று சேரும் நிலையில் சின்மயி மற்றும் சிவா ஆகிய இருவரும் மீண்டும் சந்திக்கின்றனர். ஆனால் அதில் ஒரு சின்ன பிரச்சனை ஏற்பட்ட நிலையில் சின்மயி கோபித்துக் கொண்டு அந்த விழாவில் கலந்து கொள்ளாமல் வெளியேறி விடுகிறார்.
இந்த நிலையில் பொன்வண்ணன் மற்றும் வனிதா நடத்தி வரும் ஹோட்டலுக்கு ஒரு ஆபத்து வர அந்த ஆபத்தை எப்படி சமாளிக்க போகிறார் என்ற காட்சிகளும் அடுத்த எபிசோடில் உள்ளன.
அதேபோல் சின்மயி மற்றும் அவரது தங்கை இடையே ஒரு பிரச்சனை வருகிறது. அந்த பிரச்சனை அடிதடி சண்டையாக மாறி வீட்டையே ரணகளப்படுத்த, அப்போது அவர்களை கண்டிக்கும் அவர்களது அம்மா அனைவருக்கும் தண்டனை கொடுக்கிறார். அந்த தண்டனையை செய்து கொண்டு கொடுக்கும் போது தான் அக்கா தங்கைகளுக்குள் ஒரு பாசப்பிணைப்பு ஏற்படுகிறது. இதை பார்த்து பொன்வண்ணன் மற்றும் வனிதா ஆகிய இருவரும் மகிழ்ச்சி அடைகின்றனர்
இந்த நிலையில் நடிகர் ராஜ் அய்யப்பா தனது மாமாவிடம் போன் செய்து எனது உண்மையான அப்பா யார் என்று எனக்கு தெரிய வேண்டும் என்று அவர் கேட்கும்போது அவர் ஒரு புகைப்படத்தை தருகிறார் . நீ 10 வயதில் இருக்கும் போது உன் அப்பாவுடன் எடுத்த புகைப்படம் இதுதான் என்று கூற, அப்போது அடுத்த வாரத்திற்கான முன்னோட்ட வீடியோவில் பொன்வண்ணன் தான் அவருடைய அப்பா என்பது போல் காண்பிக்கப்படுகிறது. இது கதையின் பெரும் திருப்பத்தை ஏற்படுத்துமா? என்பதை அடுத்தடுத்த எபிசோடுகளில் பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments