close
Choose your channels
anabel
friendship

இளம் நாயகனின் அடுத்த படத்தில் வடிவேலு

Monday, September 26, 2016 • தமிழ் Comments

வைகைப்புயல் வடிவேலு கடந்த சில மாதங்களாகவே கோலிவுட்டில் பிசியாக உள்ளார். சமீபத்தில் விஷாலின் 'கத்திச்சண்டை' படத்தில் நடித்து முடித்த வடிவேலு தற்போது ஜி.வி.பிரகாஷின் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.,
'தில்லுக்கு துட்டு' இயக்குனர் ராம்பாலா இயக்கவுள்ள அடுத்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தில் இரண்டு முக்கிய நட்சத்திரங்கள் இணையவுள்ளனர். ஒருவர் வைகைப்புயல் வடிவேலு, மற்றொருவர் நடிகை ஜெனிலியா.
விஜய் நடித்த 'வேலாயுதம்' படத்திற்கு பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் ஜெனிலியா நடிக்கவுள்ளார். வரும் டிசம்பர் முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Get Breaking News Alerts From IndiaGlitz