close
Choose your channels
RaRa

உனக்கு ரிகர்சலே தேவையில்லை: தமிழ் ஹீரோவிடம் கூறிய ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்!

Wednesday, July 28, 2021 • தமிழ் Comments

பிரபல தமிழ் ஹீரோ ஒருவரிடம் ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் உனக்கு ரிகர்சலே தேவையில்லை நேரடியாக ஷாட்டுக்கு சென்று விடலாம் என்று கூறியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவின் திறமையான நடிகர்களில் ஒருவரான அருண் விஜய், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தற்போது தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். தற்போது அவர் தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பதும் அவர் ஒரே நேரத்தில் நான்கு திரைப் படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அருண்விஜய் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று, ‘அக்னிச்சிறகுகள்’. விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் ஆகிய இரண்டு ஹீரோக்கள் நடித்து வரும் இந்த படத்தை ’மூடர்கூடம்’ நவீன் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிரடி ஆக்ஷன் மற்றும் திரில்லர் படமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் முக்கிய கேரக்டரில் அக்சராஹாசன் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. அம்மா கிரியேஷன்ஸ் சிவா இந்த படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்ற போது அங்கு அதிரடி சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டன. அந்த சண்டைக்காட்சியை ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் விக்டர் என்பவர் இயக்கி வந்ததாக தெரிகிறது. அப்போது அருண் விஜய் தனக்கு தெரிந்த வித்தைகளை எல்லாம் ஸ்டண்ட் மாஸ்டரிடம் செய்து காட்டிய காட்டியதாகவும் குறிப்பாக அவர் அந்தர் பல்டி அடித்ததை பார்த்து அசந்துபோன ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் விக்டர் உனக்கு ரிகர்சலே தேவையில்லை, நேரடியாக ஷாட்டுக்கு போய்விடலாம் என்று கூறியதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Get Breaking News Alerts From IndiaGlitz