close
Choose your channels
Por
Joshwa

மகனின் முதல் விமான பயணம்: புகைப்படத்தை வெளியிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்!

Thursday, January 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஹரிதிக் பாண்டியா கடந்த சில ஆண்டுகளாக நடிகை நடாஷாவை காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களது திருமணம் ஒரு சில மாதங்களில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக திருமணம் தள்ளிப் போனது

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடாஷாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது என்பதும் இந்த குழந்தைக்கு அகஸ்தியா பாண்ட்யா என்று பெயர் வைக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே

ஹர்திக் பாண்ட்யா மற்றும் நடாஷா ஆகிய இருவருமே தங்களது சமூக வலைதளங்களில் அவ்வப்போது குழந்தையின் புகைப்படத்தை பதிவு செய்து வந்தார்கள் என்பதும் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்து வந்தது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சற்று முன் ஹர்திக் பாண்டியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் விமானத்தில் தனது குழந்தையை மடியில் வைத்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். மேலும் தனது மகனின் முதல் விமான பயணம் இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முதல் விமான பயணம் செய்யும் ஹர்திக் பாண்ட்யா மகன் சிரித்த முகத்துடன் அழகாக காட்சி அளிப்பது அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.