close
Choose your channels
warrior
iravin_nizhal

நடுக்கடலில் பிரபல நடிகைக்கு லிப்கிஸ் கொடுத்த ஹர்திக் பாண்டியா: வைரலாகும் வீடியோ

Thursday, January 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடுக்கடலில் சொசுகு படகு ஒன்றில் பிரபல நடிகை ஒருவருக்கு கிரிக்கெட் வீரர் லிப்கிஸ் கொடுத்த வீடியோ இணையதளங்களில் வைரலாகியுள்ளது

இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வீரர் ஹர்திக் பாண்டியாவும் செர்பிய நாட்டின் நடிகை நடாசாவும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்த நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் தனது காதலை உறுதி செய்து நடிகை நடாஷாவுக்கு நடுக்கடலில் படகு ஒன்றில் மோதிரம் அணியும் வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஆகியோர் பதிவிட்டுள்ளனர். நடுக்கடலில் சொசுகு படகு ஒன்றில் நடாசாவிடம் மோதிரத்தை பரிசாக கொடுத்த ஹர்திக் பாண்டியா, நடாஷாக்கு லிப்கிஸ் கொடுக்கும் காட்சியும் அந்த வீடியோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் ஆகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹர்திக் பாண்டியா, நடாஷா காதல் ஜோடிக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துகளைப் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.