close
Choose your channels
Don
Nenjukku Needhi

துணை நடிகர் முதல் மாஸ் நடிகர் வரை: விஜய்சேதுபதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Sunday, January 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி துணை நடிகராக தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்து தற்போது மாஸ் நடிகராக மாறியுள்ளார். இந்த நிலையில் இன்று அவர் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் நடித்த ’புதுப்பேட்டை’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் துணை நடிகராக நடித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சீனுராமசாமியின் ‘தென்மேற்கு பருவக்காற்று’ என்ற திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் ’பீட்சா’ ’சூது கவ்வும்’ ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ உள்பட பல திரைப்படங்களில் நாயகனாக நடித்த விஜய் சேதுபதிக்கு ’நானும் ரவுடிதான்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி படமாக பெரும் திருப்பத்தை கொடுத்தது.

அதன்பின் ஆக்ஷன் படமாக இருந்தாலும் சரி, சென்டிமென்ட் கதையம்சம் படமாக இருந்தாலும் சரி அவர் அனைத்து கேரக்டருக்கும் பொருந்தும் வகையில் தன்னை மாற்றிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ’விக்ரம் வேதா’ என்ற மிகப்பெரிய சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த பின்னர் அவருடைய மார்க்கெட் தமிழ்த்திரையுலகில் உச்சத்திற்கு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹீரோ, வில்லன், வயதான கேரக்டர், சிறப்பு தோற்றம் என எந்த கேரக்டரிலும் நடிக்க அளவுக்கு அவர் தன்னை பக்குவப்படுத்திக் கொண்டார். மேலும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து தற்போது தேசிய நடிகராகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வருடத்திற்கு 10 படங்களுக்கு மேல் நடித்து வரும் முன்னணி ஹீரோ தமிழ் திரையுலகில் விஜய் சேதுபதி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் அவருக்கு நம்முடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.