close
Choose your channels
aranmanai

'பொன்மகள்' ஜோதிகாவுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

Tuesday, October 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகையும் தயாரிப்பாளரும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா இன்று தனது 44வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ஒட்டுமொத்த திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நம்முடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

அஜித் நடிப்பில் உருவான ’வாலி’ என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. அதன்பிறகு சூர்யா நடித்த ’பூவெல்லாம் கேட்டுப்பார்’ என்ற படத்தில் நாயகியாக நடித்த நிலையில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு உள்பட தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ’சந்திரமுகி’ உலகநாயகன் கமலஹாசனுடன் ’தெனாலி’ மற்றும் ’வேட்டையாடு விளையாடு’ ஆகிய படங்களில் ஜோதிகா நடித்துள்ளார்.

மேலும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஜூன் ஆர், மொழி, சினேகிதியே ஆகிய படங்களிலும் ஜோதிகா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவை திருமணம் செய்த பின் சில ஆண்டுகள் திரையுலகில் இருந்து விலகியிருந்த ஜோதிகா ’36 வயதினிலே’ என்ற படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி ஆனார்.

அதன்பின்னர் ’மகளிர் மட்டும்’, ’நாச்சியார்’ ’செக்கச்சிவந்த வானம்’ ‘பொன்மகள்’ உள்பட சில படங்களில் நடித்து ஜோதிகா நடித்தார்.

இந்த நிலையில் ஜோதிகா தற்போது மும்பையில் தங்கியிருந்து 2டி நிறுவனத்தின் தயாரிப்பு பணிகளை கவனித்து வருவதாகவும் 2டி நிறுவனத்தின் சார்பில் இன்னும் பல வெற்றி படங்களை தயாரிக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

44வது பிறந்த நாளை கொண்டாடும் ஜோதிகா ‘சூரரை போற்று’ போன்ற பல வெற்றி படங்களை தயாரித்து விருதுகளை குவிக்க மீண்டும் நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment