close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan
Buffoonn

காத்துவாக்குல சமந்தாவுக்கு குவியும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Thursday, April 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சமந்தா நடித்த 'காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் அவரது பிறந்தநாள் இன்று ரசிகர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னை பெண்ணான சமந்தா, கௌதம் மேனன் இயக்கிய ’விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற திரைப்படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் அறிமுகமானார். அதன்பின் அதர்வா முரளி ஹீரோவாக அறிமுகமான ’பானா காத்தாடி’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்த சமந்தா தொடர்ச்சியாக மாஸ் நடிகர்களுடன் தொடர்ந்து நடித்தார்.

தளபதி விஜய்யுடன் தெறி, கத்தி, மெர்சன்ல், சூர்யாவுடன் அஞ்சான், விக்ரமுடன் ’பத்து எண்றதுக்குள்ள’ தனுசுடன் ’தங்கமகன்’ விஷாலுடன் ‘இரும்புத்திரை’, சிவகார்த்திகேயனுடன் ‘சீமராஜா’ என பல வெற்றிபடங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் அவர் பிரபல நடிகையாக உள்ளார். தற்போது அவர் ’சாகுந்தலம்’ ’யசோதா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை சமந்தா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அவருடைய பிறந்த நாளில் வெளியான ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடையவும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.