close
Choose your channels
soodhukavvum

நடிகர் ஆர்யாவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Saturday, December 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான நடிகர் ஆர்யா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2005ஆம் ஆண்டு ’அறிந்தும் அறியாமலும்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ஆர்யா அதன்பின்னர் ’பட்டியல்’ ’வட்டாரம்’ ’நான்கடவுள்’ ’மதராசபட்டினம்’ ’அவன் இவன்’ ’ராஜா ராணி’ ’ஆரம்பம்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார் என்பதும், சமீபத்தில் வெளியான ’சார்பாட்டா பரம்பரை’ என்ற திரைப்படத்தின் வெற்றி அவரை தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் பட்டியலுக்கு கொண்டு சென்றாது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு படத்திலும் ’கேப்டன்’ என்ற படத்திலும் ஆர்யா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ஆர்யா கடந்த 2019ஆம் ஆண்டு நடிகை சாயிஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் பெண் குழந்தை பிறந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

’சார்பாட்டா பரம்பரை’ வெற்றி போலவே இன்னும் பல வெற்றிகளை நடிகர் ஆர்யா குவிக்க வேண்டும் என்று இந்த இனிய பிறந்த நாளில் அவருக்கு நமது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment