close
Choose your channels

சூப்பர்ஹிட் படத்தின் 2ஆம் பாகத்தில் எச்.வினோத்.. தள்ளி போகிறதா கமல் படம்?

Saturday, December 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது அதற்கு முன்பு இன்னொரு படத்தை எச் வினோத் இயக்க இருப்பதாகவும், கமல் வேறு படங்களில் பிஸியாக இருப்பதால் இருவரும் இணையும் படம் தள்ளி போனதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு எச்.வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்த ’தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எச் வினோத் இயக்க திட்டமிட்டு இருப்பதாகவும் இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்து இடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன

முதல் பாகத்தை தயாரித்த ட்ரீம் வாரியர் நிறுவனம் தான் இரண்டாம் பாகத்தையும் தயாரிக்க இருப்பதாகவும் கார்த்தி நடிப்பில் உருவாக இருக்கும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும் தெரிகிறது.

உலகநாயகன் கமல்ஹாசன் ’இந்தியன் 2’ ’தக்லைப்’ மற்றும் 'கல்கி 2898 ஏடி’ ஆகிய படங்களில் தற்போது கமிட்டாகி பிசியாக இருப்பதால் கமல் - எச் வினோத் படம் தள்ளிப் போய் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.