close
Choose your channels

சூர்யா-வெற்றிமாறனின் 'வாடிவாசல்' குறித்து சூப்பர் அப்டேட் தந்த ஜிவி பிரகாஷ்

Tuesday, April 13, 2021 • தமிழ் Comments

சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘வாடிவாசல்’ என்ற திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட தகவல்கள் வெளிவராமல் இருந்தது

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ஜிவி பிரகாஷ் அவர்கள் ‘வாடிவாசல்’ படத்தின் பாடல்களை கம்போஸ் பணியைத் தொடங்கிவிட்டதாக அறிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தற்போது சூர்யா, பாண்டிராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் சூரி நடிக்கும் திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களும் முடிந்த பின்னர் சூர்யா மற்றும் வெற்றிமாறன் ‘வாடிவாசல்’ படத்திற்காக இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz