close
Choose your channels
anabel
friendship

மனைவியுடன் ஜிவி பிரகாஷ் கொடுக்கும் தேன் விருந்து

Tuesday, September 11, 2018 • தமிழ் Comments

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியுடன் கொடுக்கவிருக்கும் தேன் விருந்து குறித்த தகவலை தற்போது பார்ப்போம்

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'பார்ட்டி' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது என்பதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படவுள்ளது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தில் பிரேம்ஜி இசையில் கங்கை அமரன் வரிகளில் உருவான பாடலாகிய 'தேன் புதுதேன்' என்ற பாடலை ஜிவி பிரகாஷும் அவருடைய மனைவியும் பாடகியுமான சைந்தவியும் பாடியுள்ளனர். இந்த பாடல் வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியாகவுள்ளதாக இயக்குனர் வெங்கட்பிரபு தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். ரசிகர்களின் காதில் தேனாக இனிக்கும் இந்த பாடலை வரவேற்க அனைவரும் தயாராகுங்கள்

ஜெயராம், சத்யராஜ், ஜெய், ஷாம், சிவா, ரம்யாகிருஷ்ணன், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பேத்ராஜ் உள்பட பலர் நடித்துள்ள 'பார்ட்டி' திரைப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரித்துள்ளார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவில், ப்ரவீண் படத்தொகுப்பில் உருவாகியுள இந்த படம் இம்மாத இறுதியில் வெளியாக வாய்ப்பு உள்ளது.

Get Breaking News Alerts From IndiaGlitz