'நாச்சியார்' படத்தில் ஜோதிகாவின் தம்பியா? ஜி.வி.பிரகாஷ் பதில்
Saturday, March 4, 2017 தமிழ் Comments
தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் பிரபல நடிகை ஜோதிகாவும், ஜி.வி.பிரகாஷூம் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர் என்பது தெரிந்ததே. கண்டிப்பாக இருவரும் ஜோடியாக நடிக்க வாய்ப்பில்லை என்பதால் ஜோதிகாவின் தம்பியாக ஜி.வி.பிரகாஷ் நடிப்பதாக ஒருசில ஊடகங்களில் செய்தி வெளிவந்தது.
இதுகுறித்து 'புரூஸ்லீ' படத்தின் புரமோஷனில் இருந்த ஜி.வி.பிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார். ஜோதிகாவின் தம்பியாக 'நாச்சியார்' படத்தில் நடிக்கவில்லை என்று கூறிய அவர், ஜோதிகா மிகச்சிறந்த நடிகை என்றும் அவர் ஒரு பாசிட்டிவ்வான நபர் என்றும், அவர் மாதிரி ஒரு பாசிட்டிவ் நபர் இந்த படத்தில் நடிப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றும் அவர் கூறினார்
ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா, ராக்லைன் வெங்கடேஷ் உள்பட பலர் நடித்துவரும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார். பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.