close
Choose your channels
NMM

ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தில் ஜோடியான '96' நடிகை!

Friday, September 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த ‘96’ படத்தில் நடித்த நடிகை ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது அவர் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

’திட்டம் இரண்டு’ என்ற திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஜீவி பிரகாஷ் நாயகனாக நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கெளரி கிஷான் நடிக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகை கெளரி கிஷான் ஏற்கனவே விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவான ‘96’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு ஹேஷம் அப்துல் வஹாப் என்பவர் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும் இந்த படம் டைம் டிராவல் குறித்த கதையம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.