close
Choose your channels
Por
Joshwa

தொடர்ச்சியாக தனுஷ் படங்களுக்கு இசையமைக்கும் ஜிவி பிரகாஷ்.. என்னென்ன படங்கள்?

Friday, December 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிக்கும் மூன்று திரைப்படங்களுக்கு அடுத்தடுத்து ஜிவி பிரகாஷ் தான் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே தனுஷ் நடிப்பில் உருவான ’கேப்டன் மில்லர்’ என்ற படத்திற்கு ஜிவி பிரகாஷ் தான் இசையமைத்துள்ளார் என்பதும் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது தனுஷ் ’டி50’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்திலும் ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளர் என்பதும் கூறப்பட்டு வருகிறது

இந்த நிலையில் தனுஷின் அடுத்த படத்திற்கும் ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளர் என்று கூறப்படுகிறது. தனுஷ் விரைவில் இன்னொரு படத்தை இயக்க இருப்பதாகவும் அந்த படத்தில் தனுஷின் நெருங்கிய உறவினரான வருண் என்பவர் நாயகராக நடிக்க இருப்பதாகவும், இந்த படத்திலும் தனுஷ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்திற்கும் ஜிவி பிரகாஷ் தான் இசையமைக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ’கேப்டன் மில்லர்’, ’டி50’ மற்றும் வருண் நடிக்கும் படம் என அடுத்தடுத்து மூன்று படங்களுக்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் என்பது ஆச்சரியமான தகவலாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.