close
Choose your channels
cred

முடிவுக்கு வந்தது ஜிவி பிரகாஷின் அடுத்த படம்: விரைவில் சன் டிவியில் ரிலீஸ்!

Sunday, February 28, 2021 • தமிழ் Comments

ஜிவி பிரகாஷ் நடித்த ’வணக்கம்டா மாப்பிள்ளை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக அந்த படத்தின் நாயகி அம்ரிதா ஐயர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய தகவலை தெரிவித்துள்ளார்

ஜிவி பிரகாஷ் நடிப்பில் இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கி வந்த திரைப்படம் ’வணக்கம்டா மாப்ள’ இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்தான் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்தது என நாயகி அம்ரிதா ஐயர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து படக்குழுவினர்களுடனும், ஜிவி பிரகாஷூடனும் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.,

சன் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் சன் டிவிக்காக தயாரிக்கப்பட்டது என்பது விரைவில் இந்த படம் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஜிவி பிரகாஷ் ஜோடியாக பிகில் படத்தில் நடித்த அம்ரிதா ஐயர் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலங்களான டேனியல், ரேஷ்மா உள்பட பலர் நடித்துள்ளனர்.

Get Breaking News Alerts From IndiaGlitz