close
Choose your channels
Por
Joshwa

'கேப்டன் மில்லர்' படத்தின் சூப்பர் அப்டேட்டை கொடுத்த ஜிவி பிரகாஷ்.. தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம்..!

Tuesday, November 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த ’கேப்டன் மில்லர்’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த படத்தின் புரோமோஷன் பணியையும் விரைவில் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் சூப்பர் அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ் ஒரு பாடலை பாடி உள்ளதாக குறிப்பிட்ட ஜிவி பிரகாஷ் அந்த பாடலின் சில வரிகளையும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வறண்ட மண்ணும் குருதி குடிக்கும் …
புழுவுக்கெல்லாம் விருந்து படைக்கும் ….

நாந்தாண்டா நீதி ….
நாந்தாண்டா நீதி ….

என்ற மேற்கண்ட வரிகளுடன் கூடிய பாடலை கேட்க மிகவும் ஆர்வத்துடன் இருப்பதாக தனுசு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த பாடல் சிங்கிள் பாடலாக வெகு விரைவில் வெளியாக இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை தனுஷ் பாடிய அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த பாடலும் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ள இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடித்துள்ளார் என்பதும் சந்தீப் கிஷான், நிவேதா உள்ளிட்ட பலர் இந்த படத்தின் நடிப்பு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை பெரும் பொருட்செலவில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.