close
Choose your channels

ஜிவி பிரகாஷின் 'ரிபெல்' இன்னொரு 'சார்பாட்டா பரம்பரை' படமா?

Friday, December 3, 2021 • தமிழ் Comments

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய ‘சார்பாட்டா பரம்பரை திரைப்படம் வடசென்னையில் மக்களின் வாழ்க்கை நிலையையும் குத்துசண்டை குறித்த புரிதலையும் ஏற்படுத்தியது என்பதும் இந்த படம் ஒரு அரசியல் அறிவையும் புகுத்தி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் ‘ரிபெல்’ திரைப்படமும் ‘சார்பாட்டா பரம்பரை’ படத்திற்கு இணையான படம் என்று கூறப்பட்டு வருகிறது.

ஜிவி பிரகாஷ் நடிப்பில் அறிமுக இயக்குனர் நிகேஷ் என்பவரது இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கும் ‘ரிபெல்’ திரைப்படத்தின் பூஜை நேற்று நடந்த நிலையில் இந்த பூஜையில் இயக்குனர் பா ரஞ்சித் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் கதை மூணாறு பகுதியில் உள்ள மக்களின் அரசியல் குறித்து பேச இருப்பதாகவும் மூணாறு மக்கள் குறித்து இதுவரை வெளியே தெரியாத பல விஷயங்கள் வெளியே தெரியும் என்ரு கூறப்படுகிறது. வடசென்னை பகுதியில் உள்ள குத்துச்சண்டை வீரர்களின் இன்னொரு பக்கத்தை ‘சார்பாட்டா பரம்பரை திரைப்படம் எடுத்துக் காட்டியது போல், ரிபெல் படம் மூணாறு மக்களின் இன்னொரு பகுதியை எடுத்துக்காட்டும் என்றும் கூறப்படுகிறது

’டார்லிங்’ மற்றும் ’திரிஷா இல்லைனா நயன்தாரா’ ஆகிய படங்களை அடுத்து மீண்டும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்துடன் ஜிவி பிரகாஷ் இணைந்துள்ளார் என்பதும் இந்த படம் அவருக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz