விவாகரத்து வழக்கில் ஆஜராகி ஒரே காரில் புறப்பட்டு சென்ற ஜிவி பிரகாஷ் - சைந்தவி..!


Send us your feedback to audioarticles@vaarta.com


இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் அவரது மனைவி சைந்தவி இருவரும் பிரிவதாக சமீபத்தில் அறிவித்த நிலையில், இன்று நடைபெற்ற விவாகரத்து வழக்கில் நேரில் ஆஜராகினர். இதன் பிறகு, இருவரும் ஒரே காரில் புறப்பட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ், பாடகி சைந்தவியை சிறுவயதில் இருந்தே காதலித்து வந்த நிலையில், 2013ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் திடீரென கடந்த ஆண்டு, இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதாக சமூக வலைத்தளங்கள் மூலம் அறிவித்தனர்.
இந்த நிலையில், இவர்களது விவாகரத்து வழக்கு சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இருவரும் நேரில் ஆஜராகி, நீதிபதிகள் முன் தாங்கள் பிரிவதை மனப்பூர்வமாக ஒப்புக்கொள்கிறோம் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, இந்த வழக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
இதனை தொடர்ந்து, ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஒரே காரில் புறப்பட்டு சென்ற வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் - பாடகி சைந்தவி ஆகியோர் பரஸ்பரம் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தை நாடிய நிலையில், வழக்கு விசாரணையை நீதிபதி செல்வ சுந்தரி ஒத்திவைப்பதாக அறிவித்தார். இதையடுத்து நீதிமன்றத்திலிருந்து ஒரே காரில் இருவரும் புறப்பட்டுச் சென்றனர். #GVPrakash #Saindhavi pic.twitter.com/kOp7QyVoM6
— Idam valam (@Idam_valam) March 24, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com