close
Choose your channels

மீண்டும் ஜோடி சேரும் பிட்டு பட ஜோடி

Tuesday, December 15, 2015 • தமிழ் Comments

சமீபத்தில் வெளியான 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' படத்தில் நடித்த ஜி.வி.பிரகாஷ்-ஆனந்தி ஜோடியின் கெமிஸ்ட்ரி குறித்து பல ஊடகங்கள் பாசிட்டிவ் விமர்சனங்கள் எழுதின. இந்நிலையில் இந்த ஜோடி தற்போது மீண்டும் இணையவுள்ளது.

ரஜினியின் 'எந்திரன் 2' படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் தயாரிக்கும் மற்றொரு படத்தில் ஜி.வி.பிரகாஷ்-ஆனந்தி ஜோடி நடிக்கவுள்ளனர். இந்த படத்தை 'டார்லிங்' இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கவுள்ளார்.


இந்த படத்திற்கு 'எனக்கு இன்னொரு பேரு இருக்கு' என்ற டைட்டில் முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.

ஜி.வி.பிரகாஷ் ஏற்கனவே பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'புரூஸ்லீ' படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz