close
Choose your channels
Rajavamsam

படப்பிடிப்பில் துப்பாக்கி சூடு: பெண் ஒளிப்பதிவாளர் பரிதாப பலி!

Friday, October 22, 2021 • தமிழ் Comments

திரைப்பட படப்பிடிப்பில் ஆக்ஷன் காட்சிக்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கியால் சுட்டதில் பெண் ஒளிப்பதிவாளர் எதிர்பாராதவிதமாக பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹாலிவுட் திரைப்படமான ’ரஸ்ட்’ என்ற படத்தின் படப்பிடிப்பு மெக்சிகோவில் சமீபத்தில் நடந்தது. இதில் அலெக்ஸ் பால்ட்வின் என்பவர் நாயகனாக நடித்து வருகிறார் என்பதும் இவரது ஆக்சன் காட்சி சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’ரஸ்ட்’ படப்பிடிப்பின்போது ஆக்சன் காட்சிக்காக துப்பாக்கியால் சுட்டபோது அந்தத் துப்பாக்கியில் இருந்த குண்டு ஒன்று எதிர்பாராதவிதமாக ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ் என்பவர் மீது பட்டு அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இன்னொரு துப்பாக்கி குண்டு இயக்குனர் ஜோயல் சோசா மீதும் பட்டதை அடுத்து அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

எதிர்பாராமல் நடந்த இந்த துயர சம்பவம் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz