கள்ளக் காதலில் இருந்த மனைவியை கூகுள் மேப் மூலம் கண்டுபிடித்த கணவர்: பரபரப்பு தகவல்
வளர்ந்து வரும் டெக்னாலஜி மூலம் எதையும் கண்டு பிடித்துவிடலாம் என்ற நிலை இருக்கும் நிலையில் வேறொரு ஆணுடன் கள்ளத்தொடர்பில் இருந்த மனைவியை கூகுள் மேப் ஸ்ட்ரீட் வியூ மூலம் அவரது கணவர் கண்டுபிடித்துள்ள சம்பவம் சமூகவலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
பெரு நாட்டின் லிமா என்ற நகரத்தை சேர்ந்த ஒருவர் தற்செயலாக கூகுள் மேப் ஸ்ட்ரீட் வியூவை பார்த்து கொண்டிருந்த போது தனது மனைவி வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். நடைபாதையில் உள்ள பெஞ்ச் ஒன்றில் தனது மனைவி இன்னொரு ஆணுடன் இருந்ததையும், அந்த நபர் தனது மனைவியின் மடியில் படுத்திருப்பது போன்றும் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கூகுள் ஸ்ட்ரீட் வியூ மூலம் மனைவியின் முகம் சரியாக தெரியவில்லை என்றாலும் அவர் அணிந்திருந்த ஆடை காட்டி கொடுத்து விட்டதால் அவர் தனது மனைவி தான் என்பதை உறுதி செய்தார்.
இதனை அடுத்து மனைவி வீட்டிற்கு வந்ததும் இதுதொடர்பாக அவரிடம் கேட்டபோது அவரும் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை மறுக்காமல் ஒப்புக் கொண்டுள்ளார். இதனை அடுத்து இருவரும் தற்போது விவாகரத்துக்காக நீதிமன்றத்திற்கு சென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.