அவ கண்ணால பார்த்தா ஒரு ஸ்பார்க்கு.. 'கோட்' படத்தின் சிங்கிள் பாடல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தளபதி விஜய் நடித்த ’கோட்’ படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் ஸ்பார்க் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
யுவன் சங்கர் ராஜா கம்போஸ் செய்த இந்த பாடலை யுவன் சங்கர் ராஜாவும் வர்ஷா பாலு என்பவரும் பாடி இருக்க, கங்கை அமரன் இந்த பாடலை எழுதியுள்ளார். இந்த பாடல் முதல் முறை கேட்கும் போது அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எதிர்பார்த்தது போலவே இந்த பாடல் விஜய் மற்றும் மீனாட்சி சவுத்ரி ஆகிய இருவருக்கும் ஆன டூயட் பாடல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வழக்கம்போல் விஜய்யின் அட்டகாசமான நடன ஸ்டெப்கள், மீனாட்சி சவுத்ரியின் கிளாமர் ஆகியவை இந்த பாடலில் இருப்பதை அடுத்து நிச்சயம் இந்த பாடல் திரையில் தோன்றும் போது ரசிகர்கள் எழுந்து நின்று ஆட்டம் போட வைக்கும் அளவுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில் விஜய் ரசிகர்களை முழுமையாக திருப்தி செய்யும் பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது. இந்த பாடலின் முதல் சில வரிகள் இதோ:
அவ கண்ணால பார்த்தா ஒரு ஸ்பார்க்கு
என் முன்னால நடந்தா கேட் வாக்கு
நீ கையால போட்ட ஒரு பிரேக்கு
அட உன்னால ஆனேன் ஒரு வீக்கு
அய்யோ மனசுக்குள்ள மாட்டிக்கிட்டு
மருந்த வச்சியே
கனவுக்குள்ள வந்து வந்து கலக்கிபுட்டியே
கலங்குன மனச இப்ப தெளிய வப்பேனே
தெரிஞ்சதும் இருக்கும் மறுபடியும் வழக்கு
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com