close
Choose your channels
LoveToday
CWK

தல அஜித்தின் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் இவரா? ஆச்சரிய தகவல்!

Wednesday, August 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’வலிமை’. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்பதும் இறுதிகட்ட ஆக்சன் படப்பிடிப்புக்காக விரைவில் படக்குழுவினர் ரஷ்யா செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு இதே கூட்டணி மீண்டும் இணைகிறது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். அஜித் நடிப்பில், வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகவிருக்கும் ’தல 61’ திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா மட்டும் இல்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது.

யுவனுக்கு பதிலாக ’தல 61’ திரைப்படத்தில் இசையமைக்க பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அஜித்துடன் முதல் முறையாக ஜிப்ரான் இணையவுள்ளதை அடுத்து இந்த படத்தில் அட்டகாசமான பாடல்கள் மற்றும் பின்னணி இசை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் அஜித் ரசிகர்களை குஷி ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.