close
Choose your channels

இயக்குனராக மாறிய விஜய்சேதுபதி நாயகி!

Tuesday, October 27, 2020 • தமிழ் Comments

விஜய் சேதுபதி நடித்த ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ ’ரம்மி’ ’புரியாத புதிர்’ ’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ ’சீதகாதி’ ’சூப்பர் டீலக்ஸ்’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தவர் நடிகர் நடிகை காயத்ரி. இவர் தற்போது குறும்படம் ஒன்றை இயக்கி அதன் மூலம் இயக்குனராக மாறியுள்ளார்.

'Road to Thumba' என்ற டைட்டில் கொண்ட குறும்படத்தை இயக்கி உள்ளதாகவும் இந்த குறும்படத்தை இந்தியன் பிலிம் புரொஜக்ட் என்ற போட்டிக்காக இயக்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குறும் படத்தை இயக்குவதற்கு தனக்கு மிகுந்த சவாலாக இருந்ததாகவும் ஆனால் தன்னுடன் பணிபுரிந்த அனைவரும் கொடுத்த ஒத்துழைப்பின் காரணமாக இந்த குறும்படத்தை வெற்றிகரமாக இயக்கி முடித்துள்ளதாகவும் காயத்ரி தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ’பி.செல்வி அண்ட் டாட்டர்ஸ்’ என்ற இன்னொரு குறும்படத்தையும் அவர் இயக்கி வருவதாகவும் இந்த குறும்படம் தாய் மற்றும் மகள் இடையே இருக்கும் உறவு குறித்த அற்புதமான கதையம்சம் கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Get Breaking News Alerts From IndiaGlitz