close
Choose your channels
anabel
friendship

அமெரிக்காவில் ரஜினியை சந்தித்த பாஜக பிரபலத்தின் தாயார்: வைரல் புகைப்படம்!

Thursday, July 8, 2021 • தமிழ் Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனி விமானம் மூலம் அமெரிக்கா சென்றார் என்பதும் அமெரிக்காவில் உடல் பரிசோதனை செய்து கொண்டு அவர் இன்று அதிகாலை திரும்புவார் என்றும் செய்திகள் வெளியானது. ஆனால் அவரது வருகை ஒரு நாள் தாமதமாகி இருப்பதாகவும் இன்று இரவு அவர் அமெரிக்காவில் இருந்து கிளம்பவிருப்பதாகவும் இதனால் அவர் நாளை சென்னை திரும்பவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் அமெரிக்காவில் ரஜினிகாந்த் தங்கியிருந்த போது அவருடன் ரசிகர்கள் சிலர் மற்றும் பொதுமக்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரல் ஆனது என்பது தெரிந்ததே. அந்த வகையில் சற்று முன் வெளியான தகவலின்படி நடிகையும், பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும், நடன இயக்குனரும், பாஜக பிரபலமுமான காயத்ரி ரகுராமின் தந்தை தாயார் அமெரிக்காவில் ரஜினியை சந்தித்து உள்ளார்.

ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா ஆகிய இருவருடனும் காயத்ரி ரகுராமின் தாயார் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பதும் இது ஒரு மரியாதைநிமித்த சந்திப்பு என்றும் கூறப்படுகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz